ஆவடி: ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

712பார்த்தது
ஆவடி: ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி
சென்னையைச் சேர்ந்த விஜய் ஜோஷுவா (19) என்பவர், புதன்கிழமை இரவு 11 மணியளவில் ரப்தி சாகர் விரைவு ரயிலில் கோயம்புத்தூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றார். ஆவடி ரயில் நிலையத்தைக் கடந்தபோது, கூட்டமாக இருந்த ரயிலில் இருந்து தவறி விழுந்து அவர் உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி