புழல் சிறையில் விசாரணை கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் போது ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்குச் செல்வது வழக்கம். இந்தச் சமயத்தில் போலீசார் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகியோர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டுள்ளார்.