ஆவடியைச் சேர்ந்த மஸ்தான் செரிப் என்பவர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என்ற ஆசை வார்த்தையால் ஏமாற்றப்பட்டு, 64 லட்சம் ரூபாய் இழந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை வழங்கியதாக திண்டிவனத்தைச் சேர்ந்த அருளப்பன் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.