அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (40), ஏற்கனவே திருமணமான சத்யா (45) என்பவரை 2வது திருமணம் செய்து 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சத்யா வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதால், லட்சுமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி ஏமாற்றி வருவதாகவும், தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.