புழல் அருகே காவாங்கரையில் தனியாக வசித்து வந்த செண்பகவள்ளி (68) என்பவர், பூஜையின் போது ஏற்றப்பட்ட கற்பூரத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். துபாயில் இருந்த அவரது மகன், கண்காணிப்பு கேமரா மூலம் வீட்டில் புகை மூட்டத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.