ஆவடி, பட்டாபிராம் தண்டுறை கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்கு வரும் லாரிகள், சரக்குகளை இறக்க நீண்ட நேரம் நிற்பதால் தேவர் தெருவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையான சிவசக்தி நகர் மெயின் சாலையிலும் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள், அவசரத் தேவைகளுக்காகச் செல்பவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.