ஆவடியில் கனரக வாகனம் மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது

63பார்த்தது
ஆவடியில் கனரக வாகனம் மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது
இன்று மதியம் 12 மணியளவில் ஆவடியை அடுத்துள்ள கிழக்கு கோபாலபுரம் பிரதான சாலையில், ராஜராஜேஸ்வரி கோவில் அருகில், குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கனரக சிமெண்ட் கலவை வாகனம் ஒன்று மின் கம்பத்தில் மோதி சிக்கிக்கொண்டது. பட்டாபிராம் கோபாலபுரம் மக்கள் சேவா சங்கத்தினர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஜே.சி.பி இயந்திரம் மற்றும் கிரேன் உதவியுடன் வாகனத்தை பள்ளத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.