திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் செல்பி எடுத்தபோது கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் தவறி விழுந்த 22 வயது இளைஞர் யாசிக்கை இரண்டாவது நாளாக தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமான பூண்டி நீர்த்தேக்கம் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த யாசிக், நண்பர்களுடன் நீர்த்தேக்கத்தைப் பார்வையிட வந்தபோது, கால்வாயில் செல்பி எடுக்க முயன்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நாளை ரப்பர் படகு மூலம் தேடுதல் வேட்டை தொடர உள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.