பட்டாபிராம் அருகே சித்துக்காடு கிராமத்தில் உள்ள தனியார் உணவு கூடத்தில் சிலிண்டர் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேல் மாடியில் தீ பரவியதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.