புழலில் நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஜி. என். டி சாலை வழியாக குடிநீர் கொண்டு செல்லும் 1200 மி. மி விட்டமுள்ள பிரதான குழாயில் கடந்த 19ஆம் தேதி வெடிப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் உத்தரவின் பேரில், சேதமடைந்த குழாயை சீரமைத்து உடனடியாக தண்ணீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.