அம்பத்துார் தொழிற்பேட்டை சந்திப்பில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் பயணிக்கின்றனர். பயணியர் நிழற்குடை இல்லாததால், வெயிலிலும் மழையிலும் ஒதுங்க இடமின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.