மயான இடம் கேட்டு சடலத்துடன் போராட்டம்

0பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, மயான வசதி இருப்பதாகக் கூறி வீட்டுமனைகளை விற்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாததால், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் மயான வசதி இல்லை. இதனால், இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். விக்ரமன் என்ற முதியவரின் சடலத்தை அடக்கம் செய்ய இடம் இல்லாததால், அவரது சடலத்துடன் 30 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.

தொடர்புடைய செய்தி