புழல் சிறையில் கொலை வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த பல்லாவரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (46), சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் கடந்த 26ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.