மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

2பார்த்தது
மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், அரியன்வாயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று அமைச்சர் சா. மு. நாசர் அவர்கள் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜவேல், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் டி. மகேஸ்வரி மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி