ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனுமதியின்றி சாலைகளில் பேனர்கள் வைப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, ஆவடி சி. டி. எச். சாலை, பட்டாபிராம், திருமுல்லைவாயில், புதிய ராணுவ சாலை, கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறி வைக்கப்பட்டிருந்த 150 பேனர்களை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த இரு நாட்களில் அகற்றியுள்ளனர்.