பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

247பார்த்தது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை
எர்ணாவூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சந்திராவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் (39) என்பவர் 2018 ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்திரா தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் டேவிட் கைது செய்யப்பட்டார். திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி டேவிட்டிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.