புழல் அடுத்த கதிர்வேடு பகுதியை சேர்ந்த பிரியா, தனது மகன் நரேன் தேஜாவை (8) ஸ்கூட்டரில் டியூஷனுக்கு அழைத்துச் சென்றபோது, எதிரே வந்த மாநகர பேருந்து ஸ்கூட்டரில் உரசியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரியாவும் மகனும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கினர். சம்பவ இடத்திலேயே சிறுவன் நரேன் தேஜா பரிதாபமாக உயிரிழந்தான்.