திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி, டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியார் மதுக்கூடங்கள் 4 நாட்களுக்கு மூடப்பட வேண்டும். வரும் 21 முதல் 23ம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியன்றும் கடைகள் மூடப்படும். இந்த தடையை மீறும் தனியார் மதுக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் தெரிவித்துள்ளார்.