100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாளாக உயர்த்தி வழங்கப்படும்

510பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் ஊராட்சியில் முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாகவும், மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்குவதாகவும் உறுதியளித்தார். அதிமுகவுக்கு வாக்களித்து கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிற்றம் ஜெ. சீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி