ஆவடி ரயில்வே பணிமனையில் (EMU Workshop) மின்சாரம் தாக்கி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பயிற்சி ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயிற்சி ஊழியரிடம் வேலை வாங்கியதாகவும், பயிற்சி மட்டுமே வழங்க வேண்டும் என்ற விதி உள்ளதாகவும் கூறி சக பயிற்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சாரம் தாக்கிய பயிற்சி ஊழியர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி ஊழியர்களும், அவர்களுக்கு ஆதரவாக டிஆர்இயு தொழில் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.