திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள கேட்டர்பில்லர் தனியார் தொழிற்சாலைக்குள் சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்ட இரண்டு ஓட்டுனர்கள் ஆனந்தன் (40) மற்றும் ரவிச்சந்திரன் (42) ஆகியோரை திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர சுக்லாவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பவத்தின் போது மூன்று டிப்பர் லாரிகளில் நூற்றுக்கணக்கான லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.