புழல்: குடிநீர் குழாய் பணிகளால் தண்ணீர் விநியோகம் பாதிப்பு

412பார்த்தது
புழல்: குடிநீர் குழாய் பணிகளால் தண்ணீர் விநியோகம் பாதிப்பு
புழல், சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, கடந்த 19ம் தேதி புழல் ஏரியில் இருந்து ரெட்டேரிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால், தண்ணீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், குடிநீர் வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணி மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, கடந்த மூன்று நாட்களாக கொளத்துார், வியாசர்பாடி உள்ளிட்ட சென்னையின் பிரதான சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி