
வீட்டின் முன்பு நிறுத்திய ஆட்டோ திருட்டு: போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த காவங்கரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முனுசாமி, நேற்று மதியம் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றபோது, அவரது ஆட்டோ திருடு போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஆட்டோவை திருடிச் சென்ற மர்மநபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




































