அம்பத்தூரைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன், பெண் மருத்துவரான சமீராவுடன் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமீரா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சமீரா பெற்றோர் புகார் அளித்தனர். ஆர்.டி.ஓ விசாரணையில் இது உறுதியான நிலையில், தலைமறைவாக இருந்த அசாருதீனை இன்று போலீசார் கைது செய்தனர்.