சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், ஒருவர் தனது மனைவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஓட்டல் ஊழியர் ஜானகிராமன் (29) அவரது மனைவியை ரகசியமாக செல்போனில் புகைப்படம் எடுத்ததை கவனித்தார். செல்போனைப் பறிமுதல் செய்து பார்த்தபோது, அதில் பெண்கள், சிறுமிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜானகிராமனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஜானகிராமன் பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து ரசித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.