குன்றத்தூரில் சென்டர் மீடியனில் ஆட்டோ மோதி விபத்து

481பார்த்தது
பூந்தமல்லி அடுத்த சிக்கராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(40) என்பவர், குடிபோதையில் ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்றபோது, குன்றத்தூர் - மாங்காடு சாலையில் சிவன்தாங்கல் அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் ஆட்டோவின் கண்ணாடி உடைந்து ராஜேஷிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி