திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனைக்கு ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அவரிடம் இருந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது, ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இது குறித்து ஆய்வாளர் பத்மாவதி தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த புருஷோத்தமன் நாயக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.