பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குடிநீரை சுத்தம் செய்ய கோரிக்கை

230பார்த்தது
திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பட்டு பேரூராட்சி சோளிங்கர் ரோடு, விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த குடிநீர் மாசடைந்து வருவதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக குடிநீரை சுத்தம் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி