கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக ரமேஷ் குமார் தேர்வு

77பார்த்தது
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக ரமேஷ் குமார் தேர்வு
கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடாவைச் சேர்ந்த ரமேஷ் குமார், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர், பல்லவாடா ஊராட்சித் தலைவர், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். கே.பி.மகேஷ் அவைத் தலைவராகவும், கோவிந்தம்மாள் சீனிவாசன் இணைச் செயலாளராகவும், எஸ்.டெல்சி மற்றும் எம்.கே.பாலசுப்பிரமணியம் துணைச் செயலாளர்களாகவும், உலகநாதன் ஒன்றியப் பொருளாளராகவும், கதீஜா பானு, டேவிட் குமார், முருகன் ஆகியோர் மாவட்டப் பிரதிநிதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி