திருவள்ளூர்: ரீல்ஸ் தகராறில் இளைஞர்கள் மோதல்.. 5 பேர் கைது

7பார்த்தது
திருவள்ளூர்: ரீல்ஸ் தகராறில் இளைஞர்கள் மோதல்.. 5 பேர் கைது
திருவள்ளூர் தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கிஷோர் (20), ஸ்ரீவிக்னேஷ்குமார் (19), கோகுலகிருஷ்ணன் (21) மற்றும் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சஞ்சய் (23), சக்திவேல் (27) ஆகிய ஐந்து இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வெளியிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சனிக்கிழமை இரவு மோதிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி