சென்னை: இரிடியம் மோசடி.. ஒருவர் கைது

513பார்த்தது
சென்னை: இரிடியம் மோசடி.. ஒருவர் கைது
சென்னை பெரியமேட்டில், 'இரிடியம்' உலோக கலசம் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என ஆசை வார்த்தை கூறி, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மருபெட்டா ரமேஷ் என்பவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த விட்டல் பாபுவை, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள விடுதியில் போலீசார் நேற்று கைது செய்தனர். சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த இந்த மோசடி குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி