சென்னையில் தண்டையார்பேட்டையில் நேற்று, 10 வயது சிறுமி துர்கா வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்விசிறியில் கட்டப்பட்டிருந்த புடவையில் கால் இடறி கழுத்தை இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுமி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.