சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தின் 11 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகியுள்ளது. இதில், சென்னை விமான நிலையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 104 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.