திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள எல்லையோர சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்கூட்டரில் வந்த நெல்லூர் மண்டலத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம் இருந்து 12 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி, குட்கா கடத்தியதாக அவரை போலீசார் கைது செய்தனர்.