கும்மிடிப்பூண்டியில் 24 மணி நேரத்தில் 169 மிமீ மழை: வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

2பார்த்தது
கும்மிடிப்பூண்டியில் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 169 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி பஜாரில் சாலையின் இரு பக்கமும் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வாகன போக்குவரத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலையில் தேங்கியுள்ள மழையின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகத்தினர் மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி