கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பயிற்சி மையத்தில் நான்கு பிரிவுகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாக கூறப்படும் நிலையில், மாணவர் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்படாமல், வகுப்பிற்கு வராத சிலருக்கும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி போன்றவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வகுப்பிற்கு வரும் மாணவர்களின் கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி மடிக்கணினிகள் வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாணவி ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அளித்த புகாரின் பேரில், செய்தி சேகரிக்கச் சென்றபோது, நிர்வாக முதல்வர் ராஜலட்சுமி, முறைகேடாகப் பயன்படுத்திய மடிக்கணினிகளை மாணவிகளிடம் ஒப்படைத்தார். ஆனால், மாணவிகள் உயர் அதிகாரிகள் வந்த பின்னரே வாங்கிக் கொள்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றனர்.