அதிமுக பரப்புரைகூட்டம் 22ஆம் தேதிநடைபெறுவதால் கால்கோல் விழா

0பார்த்தது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் 'எழுச்சி பயணம்' மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் 22-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்கான கால் கோள் விழா இன்று ஆண்டார்குப்பம் பகுதியில் நடைபெற்றது. திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பொன். ராஜா, விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி