திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கீழ் முதலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட அரியதுறை கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 6000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் இன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 18 அடி உயர தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.