கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், வளைகாப்பு நிகழ்வை துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார். சமூக நலத்துறை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி கர்ப்பிணிப் பெண்களுக்கு மனமகிழ்ச்சியையும், ஆரோக்கியமான பிரசவத்திற்கான ஊக்கத்தையும் அளிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.