ஆந்திராவில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையில் தீவிர சோதனை

2பார்த்தது
ஆந்திராவில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையில் தீவிர சோதனை
ஆந்திர மாநிலத்தின் சில மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், 50க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழக எல்லையோரப் பகுதிகளில், குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி - பொன்பாடி, ஊத்துக்கோட்டை - பெரியபாளையம், மற்றும் கும்மிடிப்பூண்டி - பெத்திக்குப்பம் ஆகிய மூன்று சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி