திருத்தணி தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் சத்யகுமார், கடந்த 3ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி கட்சியினருடன் சேர்ந்து ஓட்டு சேகரித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் வேட்பாளர் சத்யகுமார் உள்பட பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.