கொட்டும் மழையில் கலெக்டர் ஆய்வு

0பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. போதிய வடிகால் வசதி இல்லாததால் மக்கள் குடிநீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் 4 மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் பாதிப்பைக் கண்ட மாவட்ட ஆட்சியர் பிரதாப், மழைநீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.