திருவள்ளூர்: மண்ணெண்ணெய் ஊற்றி மாமனார் கொலை.. மருமகளுக்கு ஆயுள் தண்டனை

336பார்த்தது
கனகம்மாசத்திரம் அடுத்த நெமிலி பகுதியைச் சேர்ந்த பழைய அலுமினியம் பாத்திரம் வியாபாரி சபாபதி (72) என்பவரின் மாற்றுத்திறனாளி மகன் பிரபாகரனுக்கு, கலைவாணி மகள் காயத்ரிக்கும் திருமணம் நடைபெற்றது. கணவரைப் பிரிந்து வாழ்ந்த காயத்ரி, சொத்துக்காக மாமனார் சபாபதியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 2019-ல் சொத்து தகராறு ஏற்பட்டபோது, அதிகாலை கட்டிலில் படுத்திருந்த சபாபதி மீது அவரது மருமகள் காயத்ரி மற்றும் காயத்ரியின் தாயார் கலைவாணி ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி