ஆரணி அரசு பெண்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம்

1பார்த்தது
ஆரணி அரசு பெண்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கோடி 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக்கட்டிடம் கட்டும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் காவேரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஹேமபூசனம், பொருளாளர் சீனிவாசன் மற்றும் திமுக நிர்வாகிகள் முத்து, கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.