வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் கட்டணம் குறித்த விவரங்கள் கைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ளன. வழக்கமாக 700-1000 ரூபாய் கட்டும் வீடுகளுக்கு 7000-10,000 வரையிலும், 10,000 ரூபாய் கட்டும் வீடுகளுக்கு ஒரு லட்சம் வரையிலும் கட்டணம் வந்துள்ளது. மின்வாரிய அலுவலகத்தை அணுகியபோது, தவறுதலாக கணக்கெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூட்டிய வீடுகளுக்கும், ஆளே இல்லாத வீடுகளுக்கும் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.