பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாய் உடைந்து, குடிநீர் ஆற்றில் பெருமளவில் கலந்து வீணாகி வருகிறது. திருத்தணி, ஆர்.கே. பேட்டை ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த குழாய், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் அடிக்கடி உடைந்து சேதமடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணீர் வீணாவதை தடுக்க குழாய்களின் தரத்தை ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.