கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேட்டில் தமிழக அரசு மினி ஸ்டேடியம் அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாற்று இடத்தில் நிலம் வழங்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் நேசகுமார் தலைமையில் மாநில நிர்வாகி நீல வானத்து நிலவன், இயக்குனர் கோபி நயினார் ஆகியோர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த நடவடிக்கை விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.