கும்மிடிப்பூண்டி: போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

1பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீசார் நடத்திய சோதனையில், ஆந்திர மாநில ரயிலில் இருந்து இறங்கிய வடமாநில பெண் உள்பட 4 பேரிடம் இருந்து 10 கிராம் பெத்தப்பெட்டமைன், 55 கிராம் கொக்கைன், 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அர்பிதாதாஸ், நைஜீரியாவைச் சேர்ந்த சிபு சோர் செட்ராக், நோன் சோ ஜோ ஆச்சின் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஷ்ணுகேசவன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் மற்றும் எடை இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. ரயில் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்றதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி