கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் 330 தொழிற்சாலைகளில், திருநங்கையர் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தொழிற்சாலைகளின் நுழைவாயிலில், ஆபாசமாக பேசி, நிர்வாக அலுவலகங்களுக்குள் நுழைந்து ஊழியர்களை மிரட்டுவதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சிப்காட் நிர்வாகம், போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.