கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி. நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். கல்வித்துறை அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.